AD

நடிகரின் மரணம் தொடர்பான மர்மங்களை விளக்கிய சிபிஐ

பிரபல மலையாள  நடிகர் கலாபவன் மணி மரணம் தொடர்பான விசாரணையை முடிந்ததை தொடர்ந்து  அவர் உயிரிழந்ததற்கான காரணத்தை தற்போது சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

கலாபவன் மணி தனது 45 வயதில் மார்ச் 3, 2016 அன்று காலமானார். அவரது உடலில் மீதில் ஆல்கஹால் மற்றும் குளோர்பைரிபோஸ் இருப்பது தெரியவந்த நிலையில் அவரது அகால மரணம் ஒரு திட்டமிட்ட கொலை என்ற சந்தேகத்தை எழுப்பியது.

தொடர்ந்தும் அவரது மரணம் தொடர்பான சர்ச்சையை, விசாரிப்பதற்கான இந்த வழக்கை விரிவாக விசாரிக்க கேரள அரசு உத்தரவிட்டது. விசாரணையின் போது அவரது நண்பர்கள் ஜாபர் இடுகி, சபுமோன் மற்றும் ஐந்து பேர் விசாரிக்கப்பட்டு பொய் கண்டுபிடிப்பாளர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதனை தொடர்ந்து கலாபவன் மணி வழக்கு விசாரணையை முடித்துக்கொண்ட சிபிஐ, மருத்துவ நிபுணர்கள் நடத்திய விரிவான பகுப்பாய்வின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட 35 பக்கங்கள் கொண்ட அறிக்கையை கொச்சியிலுள்ள தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

கலாபவன் மணி மோசமான கல்லீரல் நிலை காரணமாக, இறந்து விட்டதாக மத்திய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது . புலனாய்வு அமைப்பின் அறிக்கையில், நடிகரின் உடலில் உணவு மூலம் சேர்ந்த விஷப் பொருளே அவரது மரணத்திற்குக் காரணம், அதே நேரத்தில் நடிகர் கொலை செய்யப்பட்டார் என்ற வதந்திகளை நிராகரித்துள்ளது.

பயிர்களில் பயன்படுத்தப்படும் ஆர்கனோபாஸ்பேட் பூச்சிக்கொல்லியான குளோர்பைரிபோஸ், பச்சை காய்கறிகள் மூலம் மறைந்த நடிகரின் உடலை அடைந்தது என்றும்  இறந்த நேரத்தில் மணியின் உடலில் நான்கு மில்லிகிராம் மெத்தில் ஆல்கஹால் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் சிபிஐ அறிக்கை தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, நச்சு இரசாயனம் அநேகமாக நடிகர் மது அருந்தும் போது உட்கொண்டிருக்கலாம். மோசமான கல்லீரல் காரணமாக மீதில் ஆல்கஹால் உடலால் வெளியேற்றப்பட முடியாது என்பதால், அது ஆபத்தானது என குறிப்பிட்டுள்ளது.

மேலும், கலாபவன் மணி உடலில் கஞ்சாவின் கூறுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், மறைந்த நடிகர் உட்கொண்ட ஆயுர்வேத மருந்தின் மூலமாக இருந்திருக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது.