AD

வலைத்தலங்களில் வைரலாகும் குஷ்பு, கஸ்தூரியின் மோதல்

பிரபல  நடிகை  குஷ்பு கடந்த சில நாட்களாக டுவிட்டர் தளத்தில் இயங்கு வதை குறைத்து இருந்தார். இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா விவகாரத்தால் மீண்டும் டுவிட்டர் தளத்துக்கு திரும்பியுள்ளார்.

இதில்‘யார் நாட்டின் குடிமகன், யார் குடிமகன் அல்ல என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார் அமித்ஷா? நமது நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அழிக்கும் ஆணைகளை தர நீங்கள் யார்? அகதிகள், அந்நியர்கள் என்று நீங்கள் அழைப்பவர்கள் தான் உங்களை ஆட்சியில் அமர வைக்க வாக்களித்தவர்கள். இந்த நாடு மதச்சார்பின்மையில் வாழ்கிறது. மதத்தில் அல்ல” என்று   குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவையும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும்  டுவிட்டர் பதிவில் கடுமையாக சாடினார்.

இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கஸ்தூரி, நான் குழப்பம் அடைந்துள்ளேன். எப்படி ஓட்டுப் போடும் குடிமக்கள் அந்நியர்களாக, அகதிகளாக இருக்க முடியும்? இந்திய வாக்காளர் பட்டியலில் இருப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட குடிமக்களே. ஏதோ இந்தியர்களுக்கு அவர்கள் குடியுரிமையே பறிக்கப்படுவதை போல பேசுகிறீர்கள்.

அந்த பொய்யை நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் நீங்கள் சி.ஏ.பி. குறித்து ஒழுங்காக தெரிந்துகொள்ள வேண்டும். குஷ்பு உட்பட பல பேர் சி.ஏ.பி. மற்றும் என்.ஆர்.சி பற்றி குழப்பி கொள்கிறார்கள். என்.ஆர்.சி என்பது மதரீதியான வழிமுறை அல்ல. 1971-ல் ஆரம்பித்த, அசாமியர்களிடையே நடத்தப்பட்ட வேட்டை. அது இப்போது நிறைவடைந்துள்ளது. அது காலனிய, நேருவிய கொள்கைகளினால் உருவான ஒன்று என குஷ்புவின் டுவிட்டர் கணக்கை குறிப்பிட்டு பதிவிட்டார்.

கஸ்தூரியின் பதிவுக்கு குஷ்பு, நான் சொன்னது சரி என்று நிரூபித்து விட்டீர்கள். நான் சி.ஏ.பி. அல்லது என்.ஆர்.சி பற்றி குறிப்பிட்டேனா? . உங்கள் மனதுக்குத் ஓய்வு தேவைப்படுகிறது என பதிலடி கொடுத்துள்ளார். என்ற தகவல் வெளியாகியுள்ளது.