AD

நான் எதிலும் நடிக்கவில்லை. – நடிகர் வடிவேலு

சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த வடிவேலுக்கு அனைத்து வயதிலும் ரசிகர்கள் பட்டாலம் குவிந்துள்ளது.

இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் நடித்த வடிவேலு, பின்னர்  அதன் இரண்டாம் பாகமான இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்துவிட்டார், இதனால் பிரபல இயக்குனரான ஷங்கர் வழங்கிய புகாரின் அடிப்படையில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தடையை மீறி அவருக்கு வாய்ப்பினை வழங்க பலரும் தயங்கினர். இருப்பினும் சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் தலைவன் இருக்கிறான் படத்தில் வடிவேல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் ‘வெப் ’ தொடர்களில் நடிக்க வடிவேலுக்கு அழைப்புகள் பல வருகின்றன. இதனால் அவர் அதையேற்று நடிக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகின. இது பற்றி அவர் கூறும்போது,

நான் “வெப் சீரிஸ்” எதிலும் நடிக்கவில்லை. ஆனால் படம் தொடர்பான அறிவிப்பு ஜனவரி மாதத்தில் வெளிவரும் எனக்கூறியுள்ளார்.