AD

அடுத்தப் படம் ஆரம்பம்

வெற்றி மாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் அசுரன் பெரும்
வரவேற்பையும், வசூலையும் பெற்றுள்ளது. இப் படத்தை தாணு தயாரித்திருந்தார்.

இதில், நடிகர் தனுஷ், மஞ்சுவாரியார், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இதனையடுத்து, வெற்றி மாறன், மீண்டும் தாணு தயாரிப்பில் சூர்யா நடிப்பில் ஒரு படம் பண்ண இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் ஒரு படம் பண்ணுகிறார். படம் குறித்த மற்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.