AD

விஷால் திருமணத்துக்கு காத்திருங்கள்

நடிகர் விஷால்-அனிஷா ரெட்டி இருவருக்கும் இடையிலான திருமணம் குறித்து தொடர்ந்தும் சஸ்பென்ஸ் நீடித்துவரும் நிலையில், நடிகர் விஷாலின் அப்பா ஜி.கே. ரெட்டி,  பேட்டியளித்துள்ளார்.

நடிகர் விஷால், தன்னுடைய திருமணத்தை, நடிகர் சங்க கட்டடத்தில் கட்டப்பட்டிருக்கும் திருமண மண்டபத்தில் வைத்துத்தான் நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். 

ஆனால், நடிகர் சங்கத் தேர்தல்கள் முடிந்து, வாக்குகள் இன்னமும் எண்ணப்படாமல் இருக்கின்றன. எப்போது வாக்குகள் எண்ணப்படும் என்பது தெரியவில்லை. நீதிமன்று உத்தரவிட்டதும் எண்ணி முடிக்கப்படும். எப்போது, வாக்குகள் எண்ணப்பட்டாலும், விஷால் அணியினர்தான் வெற்றி பெறுவர். அதில் சந்தேகம் இல்லை.

விஷால் அணி மீண்டும் வெற்றி பெற்ற கையோடு, மிச்சமிருக்கும் நடிகர் சங்கத்தின் கட்டட வேலைகள் அனைத்தும் முடிக்கப்பட்டுவிடும். 

அதன்பின், அங்கு கட்டப்பட்டிருக்கும் திருமண மண்டபத்தில் வைத்து நடிகர் விஷால் திருமணம் பார் போற்ற நடைபெறும். அதுவரை கொஞ்சம் பொறுமை தேவை.-என்றார்.

நடிகர் விஷாலுக்கும்; பிரபல தொழிலதிபரின் மகளான அனிஷா ரெட்டி என்பவருக்கும், கடந்த மார்ச் 18 இல், திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவருக்கும் செப்டெம்பரில் திருமணம் நடக்கும் என கூறப்பட்டது.

எனினும் இதுவரை திருமணம் குறித்த எந்த தகவலும் இல்லாமல் இருக்கிறது. இதற்கிடையில், நடிகர் விஷால், அனிஷா ரெட்டி இருவருக்குமிடையேயான காதல் தோல்வியடைந்து விட்டது. 

இருவரும் ஒருவரை ஒருவர் பிரிய முடிவெடுத்துள்ளனர். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து, நடிகர் விஷால் படங்களை, அனிஷா ரெட்டி நீக்கி விட்டார் என்றெல்லாம் செய்தி பரவியது.

சில நாட்கள் அமைதிக்குப் பின், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று மட்டும் அனிஷா ரெட்டி கூறியிருந்தார்.