AD

காதலும் இல்லை பாடலும் இல்லை

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், வித்தியாசமான கதையுடன் தீபாவளிக்கு வரவுள்ள படம் 'கைதி'.

'மாநகரம்' படத்தை இயக்கி தற்போது விஜய் நடிக்கும் 64 ஆவது படத்தை தன் மூன்றாவது படமாக இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ்க்கு இது இரண்டாவது படம். 

இந்தப் படத்தின் சில காட்சிகளைப் பார்த்துதான் லோகேஷுக்கு தான் நடிக்கும் புதிய படத்தின் வாய்ப்பை விஜய் கொடுத்துள்ளார் என்கிறார்கள்.

விஜய்யின் 'பிகில்' படத்துடன் 'கைதி' படம் போட்டி போட்டு வெளியாகிறது. “கைதி' தீபாவளிக்கு வருகிறது. பாடல்கள் இல்லை, காதல் இல்லை, ஆக்ஷன் மட்டும் திரில் தான். இதற்காகத் தயாராக இருக்கிறீர்களா,” எனக் கேட்டு கார்த்தி டுவீட் செய்துள்ளார்.