AD

கடைசி குண்டு - என்ன சொல்கிறது

அதியன் ஆதிரை இயக்கத்தில்,  தினேஷ், ஆனந்தி நடிப்பில் வெளிவரும் படம் இரண்டாம் உலகப்போரின் ”கடைசி குண்டு”

இந்தப் படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் டென்மா இசையமைக்க கிஷோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படம் இறுதிக்கட்டப் பணிகளை முடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கிறது.

படத்தில் , லாரி டிரைவராக வேலை பார்க்கிறார் தினேஷ் . பழைய இரும்பு கடைக்கு லோடு அடிக்கும் பணி. ஒரு நாள் பழைய இரும்புகளுடன் சேர்ந்து ஒரு பழைய வெடிகுண்டு கிடைக்கிறது. 

இது இரண்டாம் உலப்போரின் போது வீசப்பட்டு வெடிக்காமல் போன குண்டு. அந்த குண்டு இப்போது வெடித்தாலும் நகருக்கே பெரும் அழிவை உண்டாக்கும். 

அந்த குண்டை கைப்பற்ற ஒரு கும்பல் முயற்சிக்கிறது. அதை லாரி டிரைவரான தினேஷ் எப்படி தடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை என்கிறார்கள்.