AD

காதலுக்காய் காத்திருக்கும் ஸ்ருதிஹாசன்

நல்லக் காதலுக்காக இப்போதும் ஏங்குகிறேன் அதற்காக காத்திருக்கிறேன் என்று கூறியள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன் .

தெலுங்கில் லட்சுமி மஞ்சு நடத்தும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  அவர் தெரிவித்ததாவது,

நல்லவர்கள் சில நேரங்களில் நல்லவர்கள் போன்றும், சில நேரங்களில் மோசமானவர்கள் போன்றும் தெரிவார்கள். சில காலம் காதல் வாழ்க்கை இனிமையாகச் சென்றது. ஆனால், அதுவே கசப்பானதாக மாறியபின், உடனடியாக அந்த வாழ்க்கையிலிருந்து விடுபட்டு விட்டேன். 

காதல் முறிவால் எந்த வருத்தமும் இல்லை. இதை ஒரு அனுபவமாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறேன். நல்ல காதலுக்காக இப்போதும் ஏங்குகிறேன்; காத்திருக்கிறேன்-என்றார்.

நடிகை ஸ்ருதிஹாசன், லண்டனைச் சேர்ந்த நாடக நடிகர் மைக்கேல் ஹோர்சேல் என்பவருடன் சில காலம் காதலில் இருந்தார். இருவரும், வெளிநாடுகளிலும் சுற்றித் திரிந்தனர். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கசப்பைத் தொடர்ந்து பிரிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.