AD

சாண்டியை நேரில் வாழ்த்திய சிம்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப் பிடித்த சாண்டியை, நடிகர் சிம்பு நேரில் சந்தித்து வாழ்த்தியுள்ளார்.  

இந்த முறை இடம்பெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், மலேசிய இசைக் கலைஞர் முகென் டைட்டிலை வென்றுள்ளார். இதில், இரண்டாவது இடத்தை   சாண்டி பிடித்தார்.

சினிமாவில் நடன இயக்குநராகப் பணி புரிந்த சாண்டிக்கு ஏற்கனவே இரசிகர்கள் ஏராளம். குறிப்பாக சிம்பு அவருக்கு நெருங்கிய நண்பர் ஆவார். எனவே தான் இந்த சீசனில் மஹத் பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினராகச் சென்றபோது, சிம்பு மிகவும் விசாரித்ததாக சாண்டியிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையிலேயே, தற்போது சாண்டியை நேரில் வாழ்த்தியுள்ளார் சிம்பு. இச் சந்திப்பு சிம்பு வீட்டில் நடந்ததாகக் கூறப்படுகிறது.  

சாண்டியைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் அவரைத் தூக்கி சுற்றுகிறார் சிம்பு. 

சாண்டிக்கு ஏதோ பரிசும் தருகிறார். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.