AD

ஆரவ்வுக்கு அடுத்தடுத்து படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர்களில்  நடிகர் ஆரவ்வும் ஒருவர். இவருக்குத் தற்போது, அடுத்தடுத்து படங்கள் வந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவர், பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே இருந்து நடிகை ஓவியாவை காதலிப்பதாக செய்தி பரவ, இருவருக்கும் ஓவர் பாப்புலாரிட்டி கிடைத்தது. ஆரவ், ராஜபீமா என்ற படத்தில் நடிக்கிறார்.

இப்படம் வெளியாகும் முன்பே, இயக்குநர் சரண் இயக்கத்தில் ‛மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்' படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இந்தப் படத்தின் படபிடிப்பு முழுமையாக முடிந்து விட்டது. விரைவில் படம் வெளியாகவிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, நடிகர் ஆரவ்வுக்கு அடுத்த பட வாய்ப்பும் வந்துள்ளது. ரகுராம் என்பவர் இயக்கும் இந்தப் படம், ரேஸ் கதைக் களம் கொண்டது. இந்தப் படத்தில், அஞ்சலி நாயர், ஆரவ்வுக்கு ஜோடியாக நடிக்கிறார்.