AD

எமிஜாக்சனுக்கு டும் டும்

ஜார்ஜ் என்பவரை காதலித்து வரும் எமிஜாக்சன் அவரை அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளவுள்ளார். இவர்களின் திருமணம் கிரீஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. 

இருப்பினும் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாகி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார் எமிஜாக்சன் . அவருக்கு இம்மாதம் பிரசவம் நடக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எமியின் காதலர் ஜார்ஜ்க்கு நேற்று 32 ஆவது பிறந்த நாள். அதனால் அவரை தனது இல்லத்துக்கு வரவைத்து தானே சமைத்து விருந்து கொடுத்ததாக தெரிவித்துள்ள எமி, அப்போது தனது வயிற்றுக்குள் இருக்கும் ஆண் குழந்தையின் ஸ்கேன் ரிப்போர்ட்டுகளையும் அவருக்குக் காண்பித்து மகிழ்ந்துள்ளார்.