AD

தனுஷ் படத்துக்கும் எம்.ஜி.ஆர் தலைப்பு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தற்போது தனுஷ் நடித்து வரும் படத்திற்கு எம்.ஜி.ஆர். நடித்த படத்தின் தலைப்பை வைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

லண்டனில் படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த படத்தின் கதைக்கு  ‛உலகம் சுற்றும் வாலிபன்' தலைப்பை வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்றும் முடிவு செய்துள்ளனராம்.

அதனால் சென்னை திரும்பியதும் அந்த படத்தை தயாரித்த நிறுவனத்திடம் பேசி தலைப்பை பெற முயற்சி செய்ய முடிவெடுத்துள்ளனர்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‛நம்ம வீட்டுப்பிள்ளை'.  படத்திற்கும்  முதலில் எம்ஜிஆர் நடித்த ‛எங்க வீட்டுப் பிள்ளை' தலைப்பை தான் வைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால்  தயாரிப்பு நிறுவனம் தர மறுத்துவிட்டதால்‛நம்ம வீட்டுப் பிள்ளை' என பெயர் வைத்தனர்.