AD

சீனாவில் தோற்றுப்போன ரஜினி

ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த '2.0' கடந்த வாரம் சீனாவில் வெளியாகி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

வெளியான மூன்று நாள்களில் வெறும் 20 கோடியை மட்டுமே இந்தப் படம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஒரு தமிழ்ப் படம், ரஜினிகாந்த் நடித்த படம் சீனாவில் வெளியானது என்பது மட்டுமே இந்தப் படத்திற்கான பெருமையாகச் சேர்ந்துள்ளது.

ஆமீர்கான் நடித்த 'தங்கல்' சீனாவில் 1200 கோடி வரை வசூலித்தது. ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படம் கூட அங்கு 100 கோடி வசூலைக் கடந்தது. 

அடுத்த சில நாள்களில் 2.0 படம் ஓடினாலும் 50 கோடியைக் கடக்குமா என்பது சந்தேகம் தான் என்கிறார்கள்.