AD

ஓவியப் பெண்மணியான அனுஷ்கா

உடல் எடை அதிகரித்த காரணத்தால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த அனுஷ்கா சைலன்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார்.

4 மொழிகளில் தயாராகும் படம். தமிழில் ‛நிசப்தம்' என்றும், மற்ற மொழிகளில் ‛சைலன்ஸ்' எனவும் பெயரிட்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இப் படத்தில், சாக்ஷி எனும் பாத்திரத்தில் வாய் பேச முடியாத ஓவிய பெண்மணியாக நடித்திருக்கிறார் அனுஷ்கா.

ஹேமந்த் மதுக்கர் இயக்கும் இப்படத்தில் அனுஷ்கா உடன் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.