AD

சதீஷுக்கு திருமணம்

 காமெடி நடிகர் சதீஷுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. விரைவில் தனது திருமண திகதியை அவர் அதிகார பூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறப்படுகிறது.

பொய் சொல்ல போறோம் படத்தில் உதவி வசனகர்த்தாவாக தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர் சதீஷ். பின்னர் ஜெர்ரி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். மதராசப்பட்டிணம் படம் இவருக்கு மக்களிடையே நல்ல அடையாளத்தைக் கொடுத்தது.

கண்ணை நம்பாதே, 100% காதல், 4ஜி, அருவம், சீறு, தீமை தான் வெல்லும், டெடி என  பல படங்களில் நடித்து வருகிறார் சதீஷ்.

இந்த நிலையில், சதீஷ் கழுத்தில் மாலையுடன் நிச்சயதார்த்த கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியானது. ஏற்கனவே இதற்கு முன்னர் சதீஷ் கழுத்தில் மாலையுடன் நிற்கும் காட்சி வைரலானதால், இப் புகைப்படமும் உண்மையானதா இல்லை படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் உண்டானது.

இது பற்றி சதீஷ் இதுவரை அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை என்ற போதும், இந்த புகைப்படம் உண்மையானது தான் என்பது தெரிய வந்துள்ளது. 

இயக்குநர் ஒருவரின் தங்கைக்கும், சதீஷுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று விட்டதாகவும், விரைவில் திருமணம் குறித்த அறிவிப்பை சதீஷ் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.