AD

பேட்டயை விழுத்திய காப்பான்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ’காப்பான்’.இப்படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியானது.

மோகன்லால், ஆர்யா, சாயீஷா, பொம்மன் இரானி போன்ற நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இதில் நடித்திருந்த இப்படம்  இரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வசூலிலும் சாதனைகளைப் படைத்து வருகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 20 ஆம் திகதி வெளியான காப்பான் படம் முதல் நாளிலேயே 2.2 கோடி ரூபா வசூலித்துள்ளது.

இதன்மூலம் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது ’காப்பான்’.

இதற்கு முன் ரஜினியின் பேட்ட படம் முதல் நாளில் 2.1 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது. தற்போது காப்பான் படம் அதனை முறியடித்துள்ளது.