AD

விஜய், கார்த்தியுடன் மோதும் தமன்னா

தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் அன்டோனோ பிரஹமா. இந்தப்படம் தற்போது பெட்ரோமாக்ஸ் என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் டாப்சிக்குப் பதிலாக தமன்னா நடித்திருக்க, படத்தை அதே கண்கள் படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். 

ஈகிள் ஐ புரொடக்ஷன் சார்பில் ஏ.குமார் தயாரிக்க, ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இந்த நிலையில் இப்படம் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ளவிருப்பதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது. 

விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி படங்கள் தீபாவளி வெளியீட்டை உறுதி செய்துள்ள நிலையில், தற்போது பெட்ரோமாக்ஸ்சும் உறுதி செய்துள்ளது.  

விஜய், கார்த்தியுடன் களத்தில் மோதப் போகிறார் தமன்னா.