AD

கண்பார்வை இல்லாத உதயநிதி ஸ்டாலின்

சைக்கோ படத்தில் கண்பார்வை இல்லாத மாற்றுத் திறனாளியாக நடிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

மிஷ்கின் இயக்கும் இந்தப் படத்தில் நித்யாமேனன், அதிதிராவ் ஹைதரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

புத்தர் காலத்தில் வாழ்ந்த அங்குலிமாலாவின் கதையில் இப்படம் உருவாகிறதாம். லைகா நிறுவனம் தயாரிக்கும் சைக்கோவுக்கு பிசி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருந்தார், அவர் விலக, இவரிடம் உதவியாளராக இருந்த தன்வீர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.