AD

நன்றி என் தங்கமே - உருகிய விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை  சிறப்பாக கொண்டாடியுள்ளார் நயன்தாரா. இந்த நிகழ்ச்சியில் இருவருக்கும் நெருக்கமான நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனராம்.

நயன்தாராவின் காதலனாக வலம் வருகிறார் விக்னேஷ் சிவன். இருவரும் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்ந்து வருவதாகவும் சொல்கிறார்கள். 

இந்த நிலையிலேயே இந்தப் பிறந்தநாள் நிகழவு நேற்று இடம்பெற்றுள்ளது.

பிறந்த நாள் கொண்டாடிய நயன்தாராவுக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ்சிவன், அதில் கூறியிருப்பதாவது,

நீ பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாள்களும் அற்புதமானதே. இனிமையான பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு நன்றி என் தங்கமே. ஆசிர்வதிக்கப்பட்ட பிறந்த நாள். என்னுடன் இருந்த அனைத்து அன்பார்ந்த நண்பர்களுக்கும் நன்றி. 

இனிமையாக, மறக்க முடியாததாக மாற்றினீர்கள். உங்கள் அனைவரின் வருடமும் அற்புதமாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கட்டும்" என்று பதிவிட்டுள்ளார்.