AD

மீண்டும் குட்டி ராதிகா

ஐந்து மொழிகளில் உருவாகும்  சரித்திர படத்தில்  நாயகியாக நடிக்கிறார் குட்டி ராதிகா. 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என உருவாகும் இப்படத்திற்கு தமயந்தி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

 நவரசன் என்பவர்  இப் படத்தை இயக்கவுள்ளார்.

படத்தில் நடிப்பதற்கு அனுஷ்காவை அணுகியபோதும், அவர் சில படங்களில் பிசியாக இருப்பதால் அந்த வேடத்திற்கு குட்டி ராதிகாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும்  செய்தி வெளியாகியிருக்கிறது.

கன்னட நடிகையான குட்டி ராதிகா  தமிழில் வர்ணஜாலம், மீசை மாதவன், சொல்லட்டுமா என பல படங்களில் நடித்தார். 

2006 இல் கர்நாடக முன்னாள் முதல்வராக குமாரசாமியை திருமணம் செய்து கொண்ட பின்னர் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்தவர் மறுபடியும்  படங்களில் நடித்து வருகிறார்.