AD

கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை

தேவைப்படும் இடங்களில், கொஞ்சம் அதிகமாக கவர்ச்சி காட்சிகள் இடம் பெறுகின்றன. அதில், தவறில்லை-இவ்வாறு கூறியுள்ளார் சனம் ஷெட்டி.

அம்புலி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, பல படங்களில் நடித்து வரும் , ,இவர் 'வெப்' தொடர்களிலும் நடிக்கிறார். 

இந்த நிலையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் தெரிவித்ததாவது,

வெவ்வேறு தளங்களில் வெளியானாலும், சினிமா மற்றும் வெப் தொடர்கள் இரண்டிலும், ஒரே மாதிரி ஊதியம், புகழ் கிடைக்கிறது. இரண்டுக்கம் ஒரே வித்தியாசம்தான்.  

சினிமாவில், ஒரு அளவுக்கு மேல், கவர்ச்சி காண்பிக்க முடியாது. வெப் தொடர்களுக்கு தணிக்கை இல்லாததால், தேவைப்படும் இடங்களில், கொஞ்சம் அதிகமாக கவர்ச்சி காட்சிகள் இடம் பெறுகின்றன. அதில், தவறில்லை,'' என்றார்.