AD

மீண்டும் திரைக்கு வரும் ஸ்ரீதிவ்யா

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அறிமுகமான நடிகை ஸ்ரீதிவ்யா தற்போது விஜய் ஆண்டனியுடன் கைகோர்த்துள்ளார்.

 ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை, ஈட்டி என பல படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா, கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற படத்திற்கு பின்னர் கடந்த இரு ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது கோலிசோடா விஜய் மில்டன் இயக்கும் படத்திற்கு விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக  கமிட்டாகியுள்ளார் ஸ்ரீதிவ்யா. 

இதையடுத்து புதிய போட்டோ செஷன் நடத்தி அந்த போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் இழுத்துள்ளார் ஸ்ரீதிவ்யா.