எமிக்கு வளைகாப்பு
கர்ப்பமாக இருக்கும் நடிகை எமி ஜாக்சனுக்கு, வளைகாப்பு நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை அவரது கணவர் ஜார்ஜ் பனையோட்டா நடத்தியுள்ளார்.
விழாவில் எடுத்த சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை எமி ஜாக்சன் பதிவிட்டுள்ளார். கூடவே, வளைகாப்பு நிகழ்வு கனவு போல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அது மட்டுமல்ல, எனது ஆண் குழந்தையை நல்ல நண்பர்கள் மற்றும் சிறந்த குடும்பத்தினருடன் கொண்டாடும் அழகான பிற்பகல் இது. தனது மகன் பல அற்புதமான பெண்களைக் தன் வாழ்வில் பெற்ற அதிர்ஷ்டசாலி பையன்... நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் என்றும் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.
Post a Comment