AD

விராட் கோலி வாழ்த்து ; மகிழும் விக்ரம் பிரபு

விக்ரம் பிரபுவின் மகன் விராட்டின் பிறந்த நாளில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி,  வாழ்த்து கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோவை நேற்று தனது டுவிட்டரில் வெளியிட்ட விக்ரம் பிரபு "உங்களது பரபரப்பான நேரத்தில் எனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்ததை இனிமையாக உணர்கிறோம். என் மகன் விராட் உங்கள் வாழ்த்து வீடியோவை பார்த்து மகிழ்ந்தான். உங்களின் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கும் வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சிவாஜியின் குடும்பம் பரம கிரிக்கெட் இரசிகர் குடும்பம். சிவாஜி பல நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியிருக்கிறார். 

சென்னையில்  பல கிரிக்கெட் வீரர்கள் சிவாஜி வீட்டு விருந்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். 

விக்ரம் பிரபு கிரிக்கெட்டின் தீவிர ரசிகர். குறிப்பாக விராட்கோலியின் ரசிகர். அதனால்தான் தன் மகனுக்கு விராட் என்று அவர் பெயரையே வைத்திருக்கிறார். 

இதை கேள்விபட்டுதான் விராட்கோலி விக்ரம் பிரபு மகன் விராட்டிற்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.