AD

இணையத்தில் வெளியிடத் தடை

பாண்டிராஜ் இயக்கியுள்ள 'நம்ம வீட்டுப் பிள்ளை' இன்றையதினம் வெளியாகியுள்ளது.

எனினும் இப் படத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிடத் தடை விதிக்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மனுவில் பட்டியலிட்டுள்ள இன்டர்நெட் நிறுவனங்கள், கேபிள் ஆபரேட்டர்கள், இணையதளங்கள் மூலம் நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டார்.

இப் படத்தில், சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர்.