AD

சாய்பல்லவியின் சாதனைகள்

தமிழோ தெலுங்கோ எந்தப் படமானாலும் சாய்பல்லவி நடித்த பாடல்கள் யூடியூப் வலைத்தளத்தில் சாதனைகளைப் படைத்து வருகிறது.

குறிப்பாக 100 மில்லியன் பார்வையாளர்களை எளிதாக கடந்து சாதனைகளைப் படைத்து வருகின்றன. மாரி-2 படத்திற்காக தனுஷ் சாய்பல்லவி நடனத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' பாடல் முதன்முறையாக 100 மில்லியன் பார்வையாளர்கள் என்கிற சாதனையைத் தொட்டு, தற்போது 648 மில்லியன்கள் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டுள்ளது. 

இதேபோல் தெலுங்கில் பிதா என்கிற படத்தில் வருண்தேஜ் சாய்பல்லவி இணைந்து ஆடிய வச்சிண்டே என்கிற பாடலை இதுவரை யூடியூப்பில் 221 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது தெலுங்கில் நானியுடன் சாய்பல்லவி இணைந்து நடித்த எம்சிஏ என்கிற படத்தில் இடம்பெற்ற எவன்டோய் நானி காரு என்கிற பாடல் தற்போது 100 மில்லியன் பார்வையாளர்கள் என்கிற சாதனையை தொட்டுள்ளது.

குறித்த மூன்று பாடல்களுமே சாய்பல்லவியின் நடனத்திற்காகவே இவ்வாறு சாதனைகளைச் செய்துள்ளதா என்கின்றனர் இரசிகர்கள்.