AD

பிக்பாஸ் வெற்றியாளர் யார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெறப் போவது யார் என சமூக வலைதளங்களில் பல கருத்துக்கணிப்புக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

பிக்பாஸ் பற்றிய விவாதங்களும், பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிகழ்ச்சிக்கு இவ்வளவு ஆதரவு இருக்கிறதா? இல்லை இது செயற்கையான ஏற்பாடா? என்ற குழப்பமும் எல்லோர் மத்தியிலும் இருக்கிறது.

கடந்த இரண்டு சீசன்களை விடவும் இதில் உணர்ச்சிகரமான விளையாட்டுகள், அதாவது மைண்ட் கேம் தான் இந்த பிக்போஸ் வீட்டுக்குள் அதிகமாக விளையாடப்படுகிறது. உள்ளே சென்ற 17 போட்டியாளர்களும், கேரக்டர் அசாசினேசன்க்கு ஆளாகியுள்ளனர்.

மீரா, சரவணன், மது, அபிராமி, சாக்ஷி என வெளியே போன அனைவரின் இமேஜும் டோட்டலாக டேமேஜ் ஆகியுள்ளது.  உள்ளிருக்கும் கவின், லாஸ்லியா, ஷெரின், வனிதா, சேரன், முகென், தர்ஷன், சாண்டி ஆகியோரின் கேரக்டர்களும் ஒவ்வொரு விதமான விமர்சனத்துக்கு ஆளாகி வருகிறது. இதனால் இந்த போட்டியில் யார் வெற்றிப் பெறப் போகிறார்கள் என்ற குழப்பம் நீடித்துக்கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் யார் எனும் கருத்து கணிப்பு, டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.