AD

விஜய்யால் கொதித்தெழும் அஜித் ரசிகர்கள்

அடுத்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் என்கிற சர்ச்சை நடந்து வரும் நிலையில்,  அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று அவரது தாயார் ஷோபா சந்திரசேகரன்  செய்தி வெளியிட்டிருந்தார்.

கொதித்துப்போயிருக்கும் அஜித்தின் ரசிகர்கள் எங்கள் தலதான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்றும் குரல் கொடுத்தும் வருகிறார்கள். 

இந்த நிலையில், விஜய்யின் 64 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அந்தப் படத்தில் நாயகியாக கியாரா அத்வானி நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த கியாரா அத்வானியை வைத்தே சர்ச்சையை ஆரம்பிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள். 

அதாவது இந்த கியாரா அத்வானி ஒரு வெப்சீரிஸில் சுயஇன்பம் செய்யும் பெண்ணாக நடித்திருந்தார். அதனால் இந்த நடிகை தான் விஜய் படத்தின் நாயகி என்பதை படக்குழு உறுதி செய்ததும், அவரை வைத்தே சர்ச்சைகளை தொடங்கி விடவேண்டியதான் என்று காத்துக் கொண்டிருக்கிறார்களாம் அஜித் ரசிகர்கள்.

ஆக, விஜய்யின் அடுத்த படம் சர்ச்சைக்குப் பஞ்சமில்லாத படமாக உருவாகும் என்று தெரிகிறது.