AD

சாஹோவின் சாதனை

உலகம் முழுவதும் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான  'சாஹோ', இந்திய அளவில் முதல் நாளில் அதிகபட்சமாக வசூலித்த இரண்டாவது படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. 

இந்தப் படத்தின் முதல் நாளிலேயே  ரூ.130 கோடி வரை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஆந்திரா, தெலங்கானாவில் 52 கோடி, கர்நாடகா 11 கோடி, தமிழ்நாட்டில் 5 கோடி, கேரளாவில் 1 கோடி, மற்ற இந்திய மாநிலங்களில் 31 கோடி, அமெரிக்காவில் 10 கோடி, மற்ற வெளிநாடுகளில் 20 கோடி என 130 கோடியை வசூலித்துள்ளதாக  கூறப்படுகிறது.

'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு முதல் நாளிலேயே 100 கோடி வசூலித்த இரண்டாவது படம். அதேசமயம் பாகுபலி 2 சாதனையை முறியடிக்கவில்லை. பாகுபலி 2 முதல்நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.150 கோடியும், உலகம் முழுக்க ரூ.200 கோடியும் வசூலித்தது.