AD

மங்காத்தா-2 எப்போது?

'மங்காத்தா' பட தினத்தை சமூக வலைத்தளங்களில் கொண்டாடிவரும், அஜித்தின் ரசிகர்கள். 'மங்காத்தா 2' எப்போது என்று கேட்டு வருகிறார்கள். 

'பில்லா' படத்திற்கு பின்னர் வெளிவந்த 'ஏகன், அசல்' ஆகிய படங்கள் படுதோல்வி அடைந்த நிலையில் 'மங்காத்தா' படம் அஜித்துக்கு திருப்புமுனையான படமாக அமைந்தது. 

வெங்கட் பிரபு, அஜித் நடித்த 'மங்காத்தா' படம், வெளியாகி நேற்றுடன் 8 ஆண்டுகள் நிறைவெய்தி விட்டது.

இந்த நிலையில் மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அவருடைய டுவிட்டரில், “உங்கள் அனைவரின் அன்புக்கு நன்றி. வேற என்ன சொல்றது. அவருக்கு தோணும் போது சொல்லுவார். ஒவ்வொரு வருடமும் அன்பு ஏறிக் கொண்டே போகிறது,” என பதிவிட்டுள்ளார்.

இதன்போதே ரசிகர்கள் 'மங்காத்தா 2' எப்போது என்று கேட்டுள்ளார்கள்.