AD

9 கோடி ரூபாவுக்கு போன பிகில்

விஜய், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் தெலுங்கு உரிமையை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

தயாரிப்பாளர் மகேஷ் கொனேரு 9 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகச் சொல்கிறார்கள்.

விஜய் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'மெர்சல்' படம் 5 கோடிக்கும், 'சர்கார்' படம் 7 கோடிக்கும் தெலுங்கு டப்பிங் உரிமை விற்கப்பட்டுள்ளது. 

அந்தப் படங்கள் பெரிய அளவில் வசூலிக்கவில்லை. என்றாலும், 'பிகில்' படம் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் இது வசூலித்து விடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.