AD

எடையைக் குறைத்த கிரண்

உடல் எடையை ஓரளவுக்கு குறைத்திருக்கும் நடிகை கிரண் சமீபத்தில் எடுத்த புகைப்படம்  ஒன்று  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹிந்தி, தெலுங்கில் சில படங்களில் நடித்து விட்டு, விக்ரமுக்கு ஜோடியாக ஜெமினி படத்தில் தமிழில் அறிமுகமான கிரண். கமல், அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தார்.

ஒரு கட்டத்தில் ஹீரோயின் வாய்ப்புகள் குறைய குத்து பாடல்களுக்கு நடன மாடினார்.  விஷால் நடித்த ஆம்பள படத்தில் அம்மா வேடத்திலும் நடித்திருந்தார்.

இதனால் சில காலம் உடலை பராமரிக்காமல் விட்டு விட்டாராம் இதனால் உடல் எடை  அதிகரித்து போனார் கிரண். 

இந்த நிலையில்தான் தற்போது உடல் எடையை ஓருவாறு குறைத்துக்கொண்ட கிரண் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.