AD

காப்பானுக்கு வந்த சோதனை

சூர்யா நடித்துள்ள 'காப்பான்' படம் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை வினியோக முறையிலோ, அவுட்ரேட் முறையிலோ வாங்க வேண்டாம் எனத் தமிழ்த் திரைப்பட வினியோகஸ்தர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாம்.

'2.0' படத்திற்காக லைகா நிறுவனம் வாங்கிய மொத்த அட்வான்ஸ் தொகையைக் கொடுக்கும் வரையில் அந்த 'நிபந்தனை' தொடரும் என்று தெரிவித்துள்ளார்களாம். 

இதையடுத்து 'காப்பான்' படத்திற்கு வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தப்படத்தையும் லைகா நிறுவனமே தயாரித்துள்ளது.

ரஜினிகாந்த் நடித்த '2.0' படத்தை 500 கோடி ரூபாய் செலவில் தயாரித்து வெளியிட்டார்கள் லைகா நிறுவனத்தினர். 

அந்தப்படம் சுமாரான வெற்றியை மட்டுமே தந்தது. அந்தப்பட வெளியீட்டின் போது வினியோகஸ்தர்களிடம் பல கோடி ரூபாய் அட்வான்ஸ் தொகையைப் பெற்றுள்ளார்கள். அவற்றை இன்னமும் திருப்பிக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.