AD

அஜித்தைப் பாராட்டிய விஜய் அப்பா

நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்துவிட்டு அஜித்தைப் பாராட்டியுள்ளார் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ.சந்திரசேகர்.

அஜித் நடிப்பில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இவரது வழக்கமான கமர்சியல் மசாலா படங்களில் இருந்து விலகி, சற்றே சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இப்படம் வெளிவந்தது. 

இந்த நிலையிலேயே, அஜித் போல ஒவ்வொரு நடிகரும் இதுபோன்று சமூக விழிப்புணர்வு உள்ள ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என அஜித்தை விஜய்யின் அப்பா பாராட்டியுள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது, எனது மனைவி ஷோபா அஜித் நடித்த படங்களை முதல் நாளே பார்த்து விடுவார். அதேபோல இந்த நேர்கொண்டபார்வை படத்தையும் எனக்கு முன்பே அவர் பார்த்து விட்டார். 
அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற தந்தை மகள் பாசம் என் கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது என்றார்.