விஜயால் மகிழ்ந்துபோன ரோபோ சங்கர்
தளபதி விஜய் தனக்கு நன்றி சொல்லியுள்ளதாக நடிகர் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றின்போதே இந்த நன்றியைக் கூறியுள்ளார். அவர் தெரிவித்ததாவது,
டிக் டாக் பார்த்து தான், இயக்குநர் அட்லி, பிகில் படத்தில் நடிக்க என்னுடய மகளை அழைத்திருக்கிறார். ஒரு மாதம் கால்பந்தாட்ட பயிற்சி கொடுத்துள்ளனர்.
முக்கியமான வேடம் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு வேடத்தில் உங்கள் மகளை நடிக்க சம்மதம் தெரிவித்ததற்காக, எனக்கு நடிகர் விஜய் நன்றி கூறினார். அத்தனை பெரிய மனிதர் எத்தனை அடக்கமாக இருக்கிறார் என்பதற்கு, இதெல்லாம் எடுத்துக்காட்டு-என்றார்.
ஏ.ஜி.எஸ்., எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து, இயக்குநர் அட்லி இயக்கி, நடிகர் விஜய் நடித்துள்ள படம் பிகில். இந்த படத்தின் படபிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. படம், தீபாவளிக்கு வெளியிட தீர்மானித்து, அதற்காக, படக்குழு துரிதமான வேலையில் இருக்கிறது.
இந்தப் படத்தில், நடிகர் ரோபோ ஷங்கரின் மகளும், ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
Post a Comment