AD

மீண்டும் கர்ப்பமான சினேகா

நடிகை சினேகாவுக்கு விகான் எனப் பெயரிடப்பட்ட நான்கு வயதில் மகன் ஒருவர் உள்ளார்.

இந்த நிலையில் தற்போது சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்துள்ளார். தற்போது அவருக்கு நான்கு மாதம் ஆவதாக கணவர் பிரசன்னா கூறியிருக்கிறார். 

நடிகை சினேகா, 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். 

முதல் குழந்தை பெற்ற பின்னர் சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்ட சினேகா, டிவி ஷோக்களில் நடுவராக இருந்து வந்தார். 

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தனுஷ் நடிக்கும் 'பட்டாஸ்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.