AD

ரவியுடன் இணையும் டாப்சி

த்ரில்லர் படமாக உருவாகி வரும்  படமொன்றில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார்.  படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடந்து வருகிறதாம்.

என்றென்றும் புன்னகை, மனிதன்' படங்களை இயக்கிய இயக்குநர் அகமதுதான் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். 

தமிழில் கடந்த சில வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்காமலிருந்த டாப்சி 'கேம் ஓவர்' படம் மூலம் மீண்டும் வந்தார். 

தற்போது, இந்தப் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இனி தமிழில் அவர் தொடர்ந்து நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.