AD

தயாரிப்பாளரான விஜய்

”மீக்கு மாத்திரமே சொப்தா” என்ற தெலுங்கு படத்தை தயாரிக்கிறார் நடிகர் விஜய் தேவரகொண்டா. அதன் மூலம், தயாரிப்பாளர் என்ற புதிய அவதாரமும் எடுத்துள்ளார்.

முன்னணி நடிகர்களான தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும், சினிமா தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அர்ஜுன் ரெட்டி படத்தில் நடித்து, அந்த படத்தின் வெற்றி மூலம்,  பிரபலமான நடிகராக மாறி விட்டார் விஜய் தேவரகொண்டா.  

ஹீரோவான அவர், தற்போது தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். இதற்காக, அவர் கிங் ஆப் தி ஹில் என்ற படத் தயாரிப்பு நிறுவனத்தையும் ஆரம்பித்திருக்கிறார். அந்த நிறுவனத்தின் முதல் படமாக ”மீக்கு மாத்திரமே சொப்தா” என்ற படத்தை தயாரிக்கிறார்.