AD

மகிழ்ச்சியில் காஜல் ; காரணம் இதுவாம்

நடிகை காஜல் அகர்வால் சுதந்திர தினத்தை முன்னிட்டு கதாநாயகியாக நடித்த இரு படங்கள் வெளியாகியுள்ளன..

கோமாளி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், தெலுங்கில் வெளியாகி உள்ள ரணரங்கம் படத்தில் சர்வானந்த்துடனும் நடித்துள்ளார் காஜல். 

இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார். பொதுவாக கதாநாயகிகளுக்கு இப்படி இரு படங்கள் ஒரே நாளில் வெளியாவது அபூர்வமான ஒன்று. 

இரு படங்களுக்கும் விமர்சனங்கள் நேர்மறையாக இருப்பதால் மகிழ்ச்சியில் உள்ளாராம் காஜல்.