AD

கைமாறும் புலிகேசி

சிம்புதேவன் இயக்கத்தில், வடிவேலு நாயகனாக நடிக்க 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படம் ஆரம்பமாகி சில நாள்களுடன் நின்றது. வடிவேலுவுக்கும், இயக்குநர் சிம்புதேவனுக்கும் இடையில் பிரச்சினை ஆனதால் படம்  கிடப்பில் போடப்பட்டது.

படப்பிடிப்பு தாமதப்பட வடிவேலுதான் காரணம், அதனால் அவர் நஷ்ட ஈடு தர வேண்டும் என தயாரிப்பாளர் தரப்பில் பஞ்சாயத்து நடந்து, பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின் அது முடிவுக்கு வந்தது. வடிவேலு தரப்பில் குறிப்பிட்ட ஒரு தொகையைத் தர சம்மதித்துள்ளனர்.

 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படத்தில் அவர் நடிக்க மாட்டார் என்றும் முடிவு எடுக்கப்பட்டது. இப்போது அவருக்குப் பதிலாக யோகிபாபு நடிக்கலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.