AD

சிவா-சூர்யா-தனுஷ் போட்டி

கிறிஸ்துமஸ் விடுமுறையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ஹீரோ' சூர்யா நடித்து வரும் 'சூரரைப் போற்று' படங்கள் வெளியிடப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இப்போது அந்தப் போட்டியில் தனுஷ் நடிக்கும் 'பட்டாஸ்' படமும் இணையலாம் என்கிறார்கள். 

இம்முறை கிறிஸ்துமஸுக்குப் போட்டி பலமாக இருக்கும். இந்த மும்முனைப் போட்டியால் மூன்று படங்களுமே தியேட்டர்களைப் பிரித்துக் கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். 

மூவருமே அப்போது வெளிவருவார்களா அல்லது கடைசி நேரத்தில் மாற்றிக் கொள்வார்களா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.