AD

மீண்டும் சூர்யாவுடன் காஜல்

நடிகர் சூர்யாவின் 39 ஆவது படத்திலும் காஜல் அகர்வால் நாயகியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.

இதற்கு முன்பு சூர்யாவுடன் மாற்றான் படத்தில் நடித்துள்ள காஜல், சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விவேகம் படத்திலும் நடித்திருந்தார்.

இதேவேளை ஜெயம் ரவியுடன் நடித்த கோமாளி படத்திற்கு பிறகு இந்தியன் 2வில் நடிக்கிறார் காஜல் அகர்வால். 

இதற்கிடையே அவர் கதையின் நாயகியாக நடித்த பாரிஸ் பாரிஸ் படமும் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.