AD

6 நாள்களில் 25 கோடி

ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'கோமாளி' படம் 25 கோடி ரூபா வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெளியான இந்தப் படம் ஆறு நாள்களில் இந்த வசூலைப் பெற்றுள்ளதாக சக்தி பிலிம் பேக்டரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப் படத்தின் டிரைலரில் ரஜினிகாந்த்தைக் கிண்டலடித்ததால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. அந்த சர்ச்சையே படத்தைப் பற்றி இலவசமாகவும் பேச வைத்தது.

இருப்பினும் படத்திற்கு வந்த இரசிகர்கள் ஏமாற்றமடையாத அளவிற்கு படத்தில் நகைச்சுவைப் பரவிக் கிடந்தது.