AD

சினிமாவுக்கு முழுக்குப்போடும் சமந்தா

தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா 2020க்குப் பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக சில தெலுங்கு தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள்.

சில ஆண்டுகளில் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என சமந்தா ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். 

அவருடைய குழந்தைகள் டீன்ஏஜிற்கு வரும்போது பாட்டி போல தோற்றமளிக்கக் கூடாது என அவர் ஏற்கெனவே சொல்லியிருந்தாராம். 

அதனால், 2020 இல் சினிமாவிலிருந்து விலகி குழந்தை பெற்ற பின்னர் சில ஆண்டு இடைவெளியில் அவர் மீண்டும் நடிக்க வரலாம் என்கிறார்கள்.

தமிழில் தற்போது வேறு எந்தப் படத்திலும் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகவில்லை. தெலுங்கில் விரைவில் '96' படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.