AD

15 கோடிக்கு முன்னேறிய கோமாளி

ஜெயம் ரவியின் கோமாளி படம் முதல் வார இறுதியில் சுமார் 15 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில்  அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுக்கும் ஹீரோக்களில் ஜெயம் ரவியும் விஷேட இடத்தைப் பிடித்துள்ளார். 

கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த டிக் டிக் டிக், அடங்க மறு ஆகிய படங்கள் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களாக அமைந்தன.

இந்த நிலையில் இவ் வருடம் அவர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த கோமாளி படமும் வெற்றிப் படமாக அமைந்துவிட்டது.  

தனி ஒருவன் படத்தின் வெற்றிக்குப் பிறகே ஜெயம் ரவியின் மார்க்கெட்டும் உயர்ந்தது. அதன்பின் அவர் நடித்து வெளிவந்த படங்களில் பூலோகம், வனமகன் படங்கள் மட்டும்தான் சரியாகப் போகவில்லை. மிருதன், போகன் படங்களும் சுமாராகவே ஓடின. 

இந்த தோல்வியை சரிசெய்யும் பொருட்டு அமோக வசூலை அள்ளிக் கொடுத்துள்ளது கோமாளி