AD

பட வெளியீட்டிற்காக மாறிய கவுதம் மேனன்

தமிழ்த் திரையுலகின் ஸ்டைலிஷான இயக்குனர் எனப் பெயரெடுத்தவர் கவுதம் மேனன். அவருடைய படங்கள் ஏதோ ஒரு சிக்கலில் சிக்கி வெளிவருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவர் இயக்கியுள்ள 'எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம்' இரண்டு படங்களும் கடந்த சில வருடங்களாகவே எப்போது முடிந்து வெளியில் வரும் என்று ரசிகர்களை காத்திருக்க வைக்கின்றன.

இதனிடையே, கவுதம் அந்தப் படங்களை விட்டுவிட்டு, புதிதாக 'ஜோஷ்வா அத்தியாயம் ஒன்று' என்ற படத்தை இயக்கி வருகிறாராம். இந்தப் படத்தில் ஐசரி கணேஷ் உறவினரான வருண் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கெனவே 'ஒரு நாள் இரவில், போகன், வனமகன், நெருப்புடா, எல்கேஜி' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

'ஜோஷ்வா அத்தியாயம் ஒன்று' என்ற பெயர் கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 'யோஹன் அத்தியாயம் ஒன்று' படப் பெயர் போலவே உள்ளது. 'யோஹன்' பதிலாக, 'ஜோஷ்வா' என மாற்றியிருக்கிறார். ஒருவேளை அந்தக் கதையையே இப்போது எடுக்கலாம்.

இந்தப் படத்தை எடுத்துக் கொடுப்பதற்காக கவுதம் மேனனுக்கு அவர் இயக்கியுள்ள படங்கள் வெளிவர உதவி செய்வதாக ஐசரி கணேஷ் உறுதி அளித்துள்ளாராம்.