AD

ஆக்ஷன் காட்சிகளுக்காக ஒல்லியானாரா கீர்த்தி சுரேஷ்

ரஜினி நடிப்பில் 'பேட்ட' படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் அடுத்து தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. இதற்கிடையில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இரண்டு படங்கள் தயாராகின்றன.

ஒரு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மற்றொரு படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். கீர்த்தி சுரேஷ் இப்போது மோகன்லாலுடன் 'மரைக்கார்- அரபிகடலின்டெ சிம்ஹம்' என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். அதோடு, 'மன்மதுடு-2' என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து அஜய் தேவ்கன் நடிக்கும் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கார்த்திக் சுப்பாராஜ் தயாரிக்கும் படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை அம்சம் கொண்டது. எனவே இந்தப்படத்தில் நடிப்பதற்காகவே வேறு படங்களில் நடிக்காமல் தன்னுடைய உடல் எடையை வெகுவாகக் குறைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்தப்படத்தில் சில ஆக்ஷன் காட்சிகளும் இருப்பதால்தான் உடல் எடையைக் குறைக்கும் முடிவை எடுத்தாராம் கீர்த்தி சுரேஷ்.