AD

பாலகிருஷ்ணா படத்தில் நமீதா

இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் அடுத்த படத்தில் என்.டி.ஆர். பாலகிருஷ்ணா நடிக்கிறார். தெலுங்கில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் 7ல் தொடங்குகிறது. இதற்காக, விரைவில் பாங்காக்குக்கு செல்ல படக் குழு தயாராகி வருகிறது. அங்கு முதல் கட்ட படபிடிப்பை முடித்துக் கொண்ட பின், இந்தியாவுக்குத் திரும்பும் படக் குழு, அப்படியே ஐதராபாத்துக்கு சென்று, அங்கு, இரண்டாம் கட்ட படபிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த படத்தில் சோனல் சவுகான் என்ற நடிகை என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். மேலும், இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக நடிகை வேதிகா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இந்த நிலையில், இந்த படத்தில், பிரபல நடிகையும் பிக்பாஸ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவருமான நமீதாவும் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. நமீதா, இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும், அவரது கேரக்டர் இந்த படத்தின் கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு வலுவாக கதை பின்னப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.