நடிகர் கமல் பாக்யராஜ் அணிக்கு ஆதரவா?
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து உள்ளார்கள். இந்த சந்திப்பின் போது, தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்கியராஜ், பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசிரி.கணேஷ், பொருளாளர் பதவிக்கு போட்டியிடும் பிரஷாந்த், நடிகர்கள் நிதின் சத்தியா, ஷ்யாம், ஸ்ரீகாந்த், ரமேஷ் கண்ணா மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர் கமலை நேரில் சந்தித்து நடிகர் சங்க தேர்தலில் அவருடைய ஆதரவை தங்கள் அணிக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், நடிகர் கமலை சந்தித்து எங்கள் அணி சார்பில் என்ன செய்ய போகிறோம் என்று தெரிவித்தோம்.
#bagyaraj #vishal #kamal #isariganesh #nadigarsangamelection2019 #tamilcinemaking



Post a Comment