AD

விஜயகாந்தின் ஆதரவை நாடும் பாக்யராஜ்..!!!

2019-22க்கான நடிகர் சங்கப்பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறவிருக்கிறது.இந்தமுறை நாசர் தலைமையில் ‘பாண்டவர் அணி’யில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ் மற்றும் பூச்சி முருகனும் போட்டியிடுகின்றனர்.
பாண்டவர் அணியை எதிர்த்து போட்டியிடும் சங்கரதாஸ் சுவாமிகள் அணியில் தலைவர் பதவிக்கு இயக்குநர் கே.பாக்யராஜ் போட்டியிடுகிறார். செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, உதயா ஆகியோரும் போட்டியிடுகின்றனர். பொருளாளராக பிரசாந்த் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் நேற்று சங்கரதாஸ் சுவாமி அணியினர் முன்னாள் நடிகர் சங்கத் தலைவரான விஜயகாந்தை சந்தித்து ஆதரவு மற்றும் வாழ்த்துப் பெற்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாக்யராஜ், கையைப் பிடித்துக் கொண்டு தெளிவாக நிச்சயம் நீங்கள் தான் வெற்றி பெறுவீர்கள் என்று கூறியதாகவும், வந்திருந்த அனைவரையும் அடையாளம் கண்டுகொண்டு பெயர் சொல்லி அழைத்ததாகவும்,
சில பத்திரிகையாளர்களின் பெயர் சொல்லி அழைத்து அவர்கள் வரவில்லையா என்று கேட்டதாகவும் சொன்னார்.பாக்யராஜின் இச்செய்தி தேமுதிக விசுவாசிகளை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

#Tamilcienamking #Bhagyaraj #Vijaiyakandh #SwamiSangarados #NadigarsangamElection2019
#Latestnews